logo-lamb

ஸ்ரீ பத்மாவதி சமேத திருவேங்கடநாதன் அறக்கட்டளை

logo-lamb

சித்தமல்லி கோவில் உங்களை வரவேற்கிறது

சித்தமல்லி - சித்தர்கள் உலவிய பூமி. அவர்களின் அருள்திறம் காலமெல்லாம் பொலிவுடன் திகழப் போகும் புனித பூமி. இந்தப் புண்ணிய பூமியில்தான் எத்தனை எத்தனை மகான்களும் சித்தர்களும் தங்களுடைய அருளாடல்களை நிகழ்த்தி இருக்கிறார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, நூற்றுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் வாழ்த்திருந்த இந்த க்ஷேத்திரம், நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மணல்மேடு வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைத்திருக்கிறது. இந்தப் புண்ணிய பூமி, விரைவிலேயே உலகப் பிரசித்தி பெறப்போகிறது என்பது ஒரு மகானின் அருள்வாக்கு!

காவிரி நதியின் கிளை நதியான கொள்ளிடம் ஆற்றின் கிழக்குத் திசையில், அமைதியான இயற்கைச் சூழலில் அமைத்திருக்கும் இந்தக் தலத்தில், கொள்ளிடம் ஆறு உத்தரவாகினியாகப் பாய்வதால், காசிக்கு நிகரான புனிதம் பெறுகிறது. இந்தத் திருத்தலத்துக்கு காஞ்சி மஹாஸ்வாமிகள் விஜயம் செய்திருக்கிறார்.

திருமூலர் இத்தலத்தில் தங்கியிருந்து கயிலாச நாதரை வழிபட்டதாக ஐதீகம். அவரைப் போன்ற சித்தர்கள் பலரும் இங்கே தங்கி இருந்து தவம் செய்தபடியால், இந்த க்ஷேத்திரத்துக்கு சித்தமல்லி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் புண்ணிய பூமி விரைவிலேயே உலகப் பிரசித்தி பெறப்போவதாக அருள்மொழி கூறிய அந்த மகானுக்கும் இந்த க்ஷேத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த மகான் யார் என்பதையும், அவரின் அருள்மொழி கேட்ட பக்தை யார் என்பதையும் பிறகு பார்ப்போம். அதற்கு முன், சுமார் ஐந்நூறு வருஷங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இங்கே காண்போமா?